மேற்குவங்கத்தில் பா.ஜ.க. வெற்றி! மோடிக்கு வாழ்த்து தெரிவித்த ட்ரம்ப்

‘வரலாற்று சிறப்புமிக்க தேர்தல் வெற்றிiயை பெற்றுள்ள பிரதமர் மோடிக்கு அதிபர் ட்ரம்ப் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்” என்று அமெரிக்க அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் குஷ் தேசாய் கூறியுள்ளார்.

மேற்​கு​வங்க சட்​டப்​பேர​வைத் தேர்​தல் முடிவு​கள் நேற்று முன்​தினம் வெளி​யிடப்​பட்​டன. மொத்​தம் 293 தொகுதிகளுக்​கான முடிவு​கள் அறிவிக்​கப்​பட்​டன. இதில் 207 தொகு​தி​களில் பா. ஜ. க வெற்றி பெற்​றது. இதுகுறித்து சர்​வ​தேச ஊடகங்​கள் செய்​தி​களை வெளி​யிட்டு உள்​ளன.

”மோடி​யின் பா. ஜ. க வங்​கத்தை வென்றிருக்​கிறது” என்ற தலைப்​பில் பி. பி. சி., செய்தி வெளி​யிட்டு உள்​ளது. பல்​வேறு சவால்​கள் நிறைந்த மேற்​கு​வங்​கத்​தில் பா. ஜ. க. வெற்றி பெற்​றிருக்​கிறது. இது மோடி ஆட்​சி​யின் முக்​கிய மைல்​கல் என்று பி. பி. சி புகழாரம் சூட்டி உள்​ளது. ‘மோடி​யின் பா. ஜ. க. மேற்​கு​வங்​கத்​தில் முதல்​முறை​யாக வெற்றி பெற்​றிருக்​கிறது” என்ற தலைப்​பில் பிரிட்​டனை சேர்ந்த தி கார்​டியன் நாளிதழ், செய்தி வெளியிட்டிருக்​கிறது.

‘எதிர்க்​கட்​சி​யின் கோட்​டையை பா. ஜ. க கைப்​பற்றி உள்​ளது” என்ற தலைப்​பில் விரி​வான செய்​தியை அமெரிக்​கா​வின் நியூN​யார்க் ரைம்ஸ் நாளிதழ் ,வெளி​யிட்​டிருக்​கிறது. மேற்​கு​வங்​கத்​தில் பா. ஜ. க​வின் வெற்றி, வரலாற்று சிறப்​புமிக்க வெற்றி என்று அந்த நாளிதழ் புகழாரம் சூட்​டி​யிருக்​கிறது. ‘முக்​கிய மாநில​மான மேற்​கு​வங்​கத்தை பாஜக வென்​றிருக்​கிறது” என்ற தலைப்​பில் வாஷிங்​டன் போஸ்ட் நாளிதழ், செய்தி வெளி​யிட்டு உள்​ளது.

பாகிஸ்​தானின் டான், வங்​கதேசத்​தின் டாக்கா ரிபியூன் ஆகிய நாளிதழ்​களும் மேற்​கு​வங்​கத்​தில் பா.ஜ.க. அபார வெற்றி பெற்றிருப்​ப​தாக செய்​தி​களை வெளி​யிட்​டு உள்​ளன. அமெரிக்க அதிபர் மாளிகை செய்தித் தொடர்பாளர் குஷ் தேசாய் நேற்று கூறும்போது, ‘வரலாற்று சிறப்புமிக்க தேர்தல் வெற்றியை (மேற்குவங்கம்) பெற்றுள்ள பிரதமர் மோடிக்கு அதிபர் ட்ரம்ப் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்” என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles