கனடாவில் உண்ணிகளால் பரவும் நோய் அதிகரிப்பு

கனடாவில் உண்ணிகளின் நடமாட்டமும், அதனால் பரவக்கூடிய ‘லைம் நோய்’ (Lyme disease) பாதிப்புகளும் கணிசமாக அதிகரித்து வருவதாக தொற்றுநோய் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

எனினும், தற்போதைய தரவுகளை விட உண்மையான பாதிப்பு எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

உண்ணிகள் தொடர்பான விழிப்புணர்வு இணையதளமான eTick.ca வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த ஆண்டு இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் நாடு தழுவிய ரீதியில் உண்ணிகளின் நடமாட்டம் பற்றிய பதிவுகள் 38.5 சதவீதம் அதிகரித்துள்ளன.

கனடா பொது சுகாதார அமைப்பின் தரவுகளின்படி, கடந்த 2025 ஆம் ஆண்டில் மட்டும் வரலாற்றிலேயே மிக அதிகமாக 7,105 ‘லைம் நோய்’ பாதிப்புகள் பதிவாகியிருந்தன.

கனடாவில் அதிகளவில் உண்ணிகள் அடையாளம் காணப்படும் ஒன்ராறியோ மாகாணத்தில், இந்த ஆண்டு ஜனவரி முதல் இதுவரையான காலப்பகுதியில் 359 லைம் நோய் பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

இதில் கடந்த வாரம் மட்டுமே 11 புதிய பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப்போது பதிவாகியுள்ள எண்கள் உண்மையான பாதிப்பை விடக் குறைவானதாகவே இருக்க வாய்ப்புள்ளது.

இது பற்றிய விழிப்புணர்வை பொதுமக்களிடமும், ஆரம்பக்கட்ட சுகாதார அதிகாரிகளிடமும் கொண்டு சேர்ப்பதன் மூலமே முறையான நோயறிதலைச் செய்ய முடியும் என தொற்றுநோய் நிபுணர் டாக்டர் ஐசக் போகோச் தெரிவித்துள்ளார்.

காலநிலை மாற்றம் காரணமாக உன்னிகள் இடம்பெயர்வதால், ‘லைம் நோய்’ மட்டுமன்றி அனபிளாஸ்மோசிஸ், பபெசியோசிஸ் மற்றும் போவாசன் வைரஸ் போன்ற அதிகம் அறியப்படாத பிற தொற்றுநோய்களும் பரவ வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஒன்ராறியோவில் இந்த ஆண்டு இதுவரை 36 அனபிளாஸ்மோசிஸ் பாதிப்புகளும், ஒரு போவாசன் வைரஸ் பாதிப்பும் பதிவாகியுள்ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles