ரொறன்ரோவின் ரெக்ஸ்டேல் (Rexdale) பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நடந்த துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார் என ரொறன்ரோ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில், குவீன்ஸ் பிளேட் டிரைவ் மற்றும் ரெக்ஸ்டேல் பெலவூர்ட் சந்திப்புப் பகுதிக்கு அவசர உதவி கோரி பொலிஸூக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
அங்கு சோதனையிட்ட அதிகாரிகள், துப்பாக்கிக் குண்டுக் காயங்களுடன் இருந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.
இச்சம்பவம் குறித்த கூடுதல் விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், விசாரணைக்கு பின் முழு விபரங்கள் வெளியிடப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
