சத்தாரதன தேரர் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தால் கைது

ராஜங்கனே சத்தாரதன என்ற தேரர், மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய ஆகியோருக்கு சமூக வலைதளங்கள் ஊடாக அச்சுறுத்தல் விடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர் கைதுசெய்யப்பட்டார் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தேரரை சங்க அமைப்பிலிருந்து நீக்குவதற்கு ஸ்ரீலங்கா ராமன்ய மகா நிகாயவின் செயற்குழு கடந்த ஆண்டு நடவடிக்கை எடுத்திருந்தது.

அவர் யூரியூப் சனல் ஒன்றை நடத்தி வருவதோடு, சமூக வலைதளங்கள் வாயிலாக அவர் வெளியிட்ட கருத்துக்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்தே அந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles