ரொறன்ரோவில் உள்ள 11 பாடசாலைகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளன.
ரொறன்ரோ நகரம் முழுவதும் உள்ள 11 பாடசாலைகளுக்கு, ஒரே நபரால் விடுக்கப்பட்டதாக நம்பப்படும் வெடிகுண்டு மிரட்டல்கள் குறித்து பொலிஸார் தகவல் வெளியிட்டுள்ளனர்.
இந்த அச்சுறுத்தல்கள் நம்பகமானவை என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Leslieville-லில் உள்ள Bruce Jr. பொதுப் பாடசாலையிலும், ஸ்காபரோவில் உள்ள புனித Augustine Seminary பாடசாலையிலும் இருந்த மாணவர்களும் ஊழியர்களும் கடந்த செவ்வாய்க்கிழமை (05) காலை வெளியேற்றப்பட்டனர்.
தொடர்ந்த விசாரணையை அடுத்து பொலிஸார் மாணவர்களையும் ஊழியர்களையும் மீண்டும் பாடசாலைகளுக்கு செல்ல அனுமதித்தனர்
தொலைபேசி வாயிலாக விடுக்கப்பட்ட இந்த மிரட்டல்கள் குறித்து தொடர்ந்து தீவிரமாக விசாரித்து வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளர்.
