12.6 மில்லியன் ரிங்கிட் கஞ்சா பூக்கள் பறிமுதல் 7 பேர் கைது
ஏப்ரல் 28 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையமன (KLIA) மற்றும் செப்பாங்கில் உள்ள கோத்தா வாரிசான் ஆகிய பகுதிகளைச் சுற்றி தனித்தனியாக மேற்கொள்ளப்பட்ட மூன்று அதிரடி சோதனைகளில் 12.6 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள சுமார் 156.7 கிலோ கஞ்சா பூக்களைப் பறிமுதல் பொலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
அதோடு போதைப் பொருள் கடத்துபவர்கள் என்று நம்பப்படும் 18 முதல் 27 வயதுக்குட்பட்ட ஆறு ஆண்கள் மற்றும் ஒரு பெண் உட்பட வெளிநாட்டைச் சேர்ந்த ஏழு சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டனர் என சிலாங்கூர் பொலீஸ் தலைமை அதிகாரி ஷசெலி கஹார் கூறினார்.
மொத்தம் 580 ரிங்கிட் பணம், 20 யூரோ வெளிநாட்டு நாணயம் மற்றும் 80,000 ரிங்கிட் மதிப்புள்ள கைக்கடிகாரம் ஆகியவையும் இந்த நடவடிக்கையின்போது பறிமுதல் செய்யப்பட்டதாக இன்று வெள்ளிக்கிழமை சிலாங்கூர் பொலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அவர் குறிப்பிட்டார்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்கள் மலேசியாவிலிருந்து வெளியே எடுத்துச் செல்லப்பட்டு ஐரோப்பாவிற்கு அனுப்பப்படவிருந்தன, மேலும் அந்த விநியோகம் ஒரு அண்டை நாட்டிலிருந்து பெறப்பட்டதாக பொலீஸ் நம்புகிறது என்று பொலீஸ் தலைமை அதிகாரி தெரிவித்தார்.
