மக்கள் முன்னிலையில் தமிழக முதல்வரின் முதல் கையொப்பம்!

தமிழ்நாட்டின் முதலமைச்சரான ஜோசப் விஜய் பதவியேற்பு விழா முடிந்ததும் மக்கள் முன்னிலையில் டிசில முக்கிய கோப்புகளில் கையழுத்திட்டார்.

தமிழகத்தின் 13ஆஆவது முதல்வராக தவெக தலைவர் சி. ஜோசப் விஜய் இன்று மே 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10.15 மணிக்குப் பதவியேற்றார். தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் விஜய்க்கு முதல்வராகப் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அதன்பின்னர், 9 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.

அதனைத்தொடர்ந்து, மக்கள் முன்னிலையில் முதல்வர் விஜய் 3 முக்கிய கோப்புகளில் கையொப்பமிட்டார்.

அவையாவன –

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை என்ற புதியதொரு திட்டத்தை தொடங்கி வைத்து அதற்கான ஆணையில் அவர் கையொப்பமிட்டார்.

500 அலகுகள் வரை பயன்படுத்தும் வீட்டு மின் நுகர்வோருக்கு இரு மாதங்களுக்கு 200 மின் அலகுகள் வரை கட்டணமில்லா மின்சாரம் வழங்கும் ஆணையில் கையெழுத்திட்டார்.

போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்கு அனைத்து மாநகரம் மற்றும் மாவட்டங்களில் போதைப்பொருள் தடுப்பு படை அலகுகளை உருவாக்கும் செயற்திட்டத்தில் கையெழுத்திட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles