எங்கள் வீட்டு பையன் அன்புத் தம்பி விஜய்க்கு கேப்டனின் வாழ்த்துக்கள்

தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவியேற்றுள்ள த.வெ.க. தலைவர் விஜய்க்கு, தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

விஜய் முதலமைச்சராக பதவியேற்பதற்கு முன்னதாக பிரேமலதா விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது:

‘தமிழ்நாட்டின் முதல்வராகப் பதவியேற்கவிருக்கும் எங்க வீட்டுப் பையன் தம்பி விஜய் அவர்களுக்கு மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம். தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழ் மக்களின் நலனுக்கும் சிறந்த நிர்வாகத் திறமையுடன் செயல்பட்டு, மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற வேண்டும்.

அன்பு தம்பி விஜய் அவர்களுக்கு கேப்டன் அவர்களின் சார்பாகவும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாகவும் எங்களுடைய மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles