தமிழ்நாடு முதல்வர் விஜயின் அரசாங்கம் 144 ஆதரவு வாக்குகளைப் பெற்று நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது.
விஜயின் அரசாங்கத்துக்கு ஆதரவாக தமிழக வெற்றிக் கழகத்தின் 106 சட்டமன்ற உறுப்பினர்கள், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களுடன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திலிருந்து நீக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர், அ. தி. மு. கவின் அதிருப்தி உறுப்பினர்களும் ஆதரவாக வாக்களித்தனர்.
அ. தி. மு. கவின் பழனிசாமி தலைமையிலான அணியினர் எதிர்த்து வாக்களித்தனர். எதிர்ப்பாக 22 வாக்குகள் பதிவாகின. அத்துடன், இந்த வாக்கெடுப்பில் பாரதிஜ ஜனதா கட்சி நடுநிலை வகிப்பதாக அறிவித்தது.
இதேநேரம், எதிர்க்கட்சியான தி. மு. க. மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியினர் வாக்கெடுப்பில் பங்கேற்காது வெளிநடப்பு செய்தனர்.
நம்பிக்கை தீர்மானம் மீதான விவாதத்தைத் தொடர்ந்து பதிலளித்த முதல்வர் ஜோசப் விஜய் தனது அரசாங்கம் நிச்சயமாக மதச்சார்பற்றதாக இருக்கும் என்று கூறினார். அத்துடன், குதிரையின் வேகத்தில் அரசாங்கம் ஈடுபடும். ஆனால், குதிரை பேரத்தில் ஈடுபடாது என்றும் கூறினார்.
