பிரிகேடியர் பால்ராஜூக்கு பாராளுமன்றில் அஞ்சலி செலுத்திய ரவிகரன்!

விடுதலைப் புலிகள் அமைப்பின் மூத்த தளபதியான சமர்க்கள நாயகன் என்று அழைக்கப்பட்ட பிரிகேடியர் பால்ராஜூக்கு பாராளுமன்றத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று வியாழக்கிழமை உரையாற்றியபோதே அவர் தனது உரையில் அஞ்சலியை செலுத்தினார்.

அவர் தனது உரையில், எமது ஈழ விடுதலைப்போராட்டத்தின் சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் எமை விட்டுப் பிரிந்து 18ஆண்டுகள் கடந்திருக்கின்றன. கந்தையா பாலசேகரம் என்ற இயற்பெயரையுடைய சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்குத்தொடுவாய் பகுதியைச் சேர்ந்தவர்.

உலகப் போரியல் வல்லுநர்களே கண்டு வியந்த சமர்க்கள நாயகன் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுக்கு இந்த உயரிய சபையிலே சிரம் தாழ்த்தி எனது அஞ்சலிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் – என்றார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles