தெற்காசியாவில் சக்திவாய்ந்த நாடு இந்தியா – அமெரிக்க பாதுகாப்பு அமைச்சர்

தெற்கு ஆசியாவில் சக்தி வாய்ந்த நாடாக இந்தியா திகழ்கின்றது என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்சேத் தெரிவித்துள்ளார்.

இந்தியா கடந்த ஆண்டு மேற்கொண்ட ஒபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது இந்தியாவின் பலத்தை உலக நாடுகள் அறியக்கூடியதாக இருந்தது எனவும் அவர் கூறியுள்ளார்.

ஆசிய-பசுபிக் பாதுகாப்பு உச்சி மாநாடு, சிங்கப்பூரில் உள்ள ஷாங்க்ரி-லா ஹோட்டலில் நேற்று நடைபெற்றது.

இதில் 44 ஆசிய – பசுபிக் நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள், இராணுவத் தளபதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.

இங்கு உரையாற்றுகையிலேயே அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

தெற்கு ஆசியாவில் இந்தியா சக்தி வாய்ந்த நாடு. அது, தனது இராணுவத்தை நவீனமயமாக்கி வருகிறது.

இந்தியாவின் வளர்ந்து வரும் இராணுவத் திறன்கள் மற்றும் நாடுகளுக்கு இடையே சமநிலையைப் பேணுவதில் அதன் உத்திகள் பாராட்டுக்குரியது.

இந்தோ-பசுபிக் பாதுகாப்பு அமைப்பில், இந்தியாவின் பங்கு முக்கியமானது.” – எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, அமெரிக்கா மற்றும் இந்தியா இடையே பாதுகாப்பு ஒத்துழைப்பு விரிவடைந்து வருகிறது.

இரு நாடுகளும் இராணுவத் தயார்நிலை மற்றும் திறன் மேம்பாட்டை அதிகரிக்க கூட்டு தயாரிப்பு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

உலகின் மிகச்சிறந்த ஆயுதங்களை அதிக அளவில், அதிவேகத்தில் மற்றும் நியாயமான விலையில் நாங்கள் தயாரிப்போம்.

ஜனாதிபதி ட்ரம்ப், கடந்த ஆண்டு பாதுகாப்புக்காக 1 டிரில்லியன் டாலர் செலவிட்டார் என அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles