நடிகர் அஜித் குமாரின் தாயாரது உடலுக்கு தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் நேற்று சனிக்கிழமை இரவு அஞ்சலி செலுத்தினார்.
நடிகர் அஜித்தின் தாயார் மோகினி மணி (84) வயது மூப்பின் காரணமாக நேற்றுக் காலை காலமானார். அன்னாரது மறைவுக்கு திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், வெளிநாட்டிலிருந்த அஜித் குமார் நேற்றிரவு தாயகம் திரும்பினார்.
இந்த நிலையில், சென்னை, ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அஜித் குடும்பத்தின் இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள மோகினி மணி உடலுக்கு அஜித் வருகைக்குப் பின் முதல்வர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.
மேலும் அஜித் மற்றும் குடும்பத்தாருக்கு, முதல்வர் ஆறுதல் தெரிவித்தார். இதன்போது உடன் நடிகை த்ரிஷாவும் இருந்தார்.
