அமெரிக்காவில் திருமணம் நடந்த சில மணி நேரத்தில் உயிரிழந்த இந்திய இளைஞர்

அமெரிக்காவில் திருமணம் நடந்த சில மணி நேரங்களில் ஹெலிகொப்டர் விபத்தில் இந்திய வம்சாவளி பைலட்டான மணமகன் உயிரிழந்த சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா​வின் டெல்டா ஏர்லைன்ஸ் நிறுவனத்தில், கேரளாவை பூர்வீக​மாகக் கொண்ட தேவ் பிஜி (வயது 26) பைலட்​டாகப் பணிபுரிந்து வந்​தார். பிஜி​யும் செவிலியர் ஜெஸ்னியும் சுமார் 10 ஆண்​டு​களுக்கு முன்பு நியூ டெஸ்​டமென்ட் தேவால​யத்​தில் முதன்​முதலில் சந்​தித்​துக் கொண்​டனர்.

அன்று முதல் இருவரும் காதலித்து வந்​தனர். இந்​நிலை​யில், அமெரிக்​கா​வின் ஜோர்​ஜியா மாகாணம், டாசன்வில்லே நகரில் உள்ள ‘தி ரெவெர்’ என்ற இடத்​தில் இவர்களது திரு​மணம் நடை​பெற்​றது.

சுமார் 400 விருந்​தினர்​கள் கலந்​து​கொண்ட இந்த திரு​மணத்​தில் தேவ் பிஜி மிக​வும் மகிழ்ச்சியாகக் காணப்​பட்​டார். திருமண வரவேற்பு முடிந்​ததும், ஹனிமூன் செல்​வதற்​காக தேவ் தம்​ப​தி​யினர் ‘ரொபின்​சன் ஆர் ​66′ ஹெலிகொப்டரில் ஏறினர்.

அப்​போது வானிலை மோச​மாக இருந்தது. இதனால் ஒரு பைலட் என்ற முறை​யில், இப்​போது ஹெலிகொப்டரில் பயணிக்க வேண்​டாம் என ஹெலியின் பைலட்​டிடம் தேவ் கூறி​யுள்​ளார். ஆனால், அதிக உயரத்​தில் பறக்​கலாம் என்று கூறி பைலட் ஹெலி​கொப்டரை இயக்​கி​னார்.

ஆனால், புறப்​பட்ட சில நிமிடங்​களி​லேயே, திரு​மணம் நடந்த இடத்​துக்கு அரு​கிலேயே உள்ள அடர்ந்த காட்​டுப் பகு​தி​யில் ஹெலிகொப்டர் விழுந்து நொறுங்​கியது. இந்த விபத்​தில் தேவ் பிஜி மற்​றும் ஹெலிகொப்டர் பைலட் ஆகிய இரு​வரும் சம்பவ இடத்​திலேயே உயி​ரிழந்​தனர்.

பலத்த காயமடைந்த மணமகள் ஜெஸ்னி மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டுள்ளார். இந் நிலையில் 10 ஆண்டு காலம் காதலித்து திருமணம் நடைபெற்ற சில மணி நேரங்களில் மணமகன் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles