சிங்கப்பூரில் கரை ஒதுங்கிய திமிங்கிலம் அரிய வகைகளில் ஒன்று

சிங்கப்பூர் கடலோரத்தில் கடந்த ஆண்டு ஒதுங்கிய திமிங்கிலம் அரிய வகைத் திமிங்கிலம் என்று கண்டறியப்பட்டுள்ளது.

தஞ்சோங் பகார் கடற்கரையில் கடந்த ஆண்டு செப்ரெம்பர் 6ஆம் திகதி இறந்த நிலையில் ஒரு திமிங்கிலம் கரை ஒதுங்கியது. அது ஒமுரா திமிங்கிலம் என்று பல மாத ஆராய்ச்சிகளுக்குப் பிறகு அடையாளம் காணப்பட்டுள்ளது.

ஒமுரா திமிங்கிலம் அரிய வகைத் திமிங்கிலமாகப் பார்க்கப்படுகிறது. அது எளிதாக மனிதர்கள் கண்ணில் சிக்காது. அது தொடர்பான தகவல்களும் குறைவாகவே உள்ளன.

“ஒமுரா திமிங்கிலத்தின் உயிரியல், எண்ணிக்கை, சூழலியல் போன்ற தகவல்கள் குறைவாகவே உள்ளன. பெரும்பாலான தகவல்கள் இல்லை,” என்று சிங்கப்பூர்த் தேசியப் பல்கலைக்கழகத்தின் லீ கோங் சியான் தேசிய வரலாற்று அருங்காட்சியின் மூத்த துணைக் காப்பாளர் டாக்டர் மார்க்கஸ் சுவா தெரிவித்தார்.

“2003ஆம் ஆண்டுதான் ஒமுரா திமிங்கிலம் புதிய விலங்கினமாக அறிவியல் உலகில் அறிவிக்கப்பட்டது. அதனால் அனைத்துலக அளவில் போதுமான தகவல் இல்லை. இதன் காரணமாக ஒமுரா திமிங்கிலம் அழியும் ஆபத்தில் உள்ள விலங்கினமாகப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது,” என்று சனிக்கிழமை (ஜூன் 6) ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்சிடம் டாக்டர் மார்க்கஸ் சொன்னார்.

“உலகில் எத்தனை ஒமுரா திமிங்கிலம் உள்ளது என்பது தெரியாத காரணத்தால், அவை எப்படி ஓரிடம் விட்டு மற்றொரு இடத்திற்குச் செல்கின்றன என்பது குறித்து விரிவாகத் தெரியவில்லை. இருப்பினும் அவை வெப்பமான, ஆழமற்ற கடலோரப் பகுதிகளில் காணப்படுகின்றன,” என்று அவர் குறிப்பிட்டார்.

வெப்பமான, ஆழமற்ற கடலோரப் பகுதிகள் என்பது இந்தோ-மேற்கு பசிபிக் கடல், தென்கிழக்காசிய நீர் பகுதிகள், இந்தியப் பெருங்கடல், வட-மேற்கு பசிபிக் கடல், ஓ‌ஷனியா கடல் பகுதிகளாகும்.

கரை ஒதுங்கிய திமிங்கிலத்திற்குப் பதின்ம வயது இருக்கும் என்றும் அவை 20 ஆண்டுகள் வரை வாழக்கூடும் என்று கூறப்படுகிறது.

பாதி உடலுடன் மட்டுமே கரை ஒதுங்கிய திமிங்கிலம் பெரிய அளவில் அழுகியிருந்தது. கிட்டத்தட்ட 10.6 மீட்டர் உயரம் கொண்ட அந்தத் திமிங்கிலத்தின் உடலில் 6.3 மீட்டர் உடல் மட்டுமே கிடைத்தது.

ஒமுரா திமிங்கிலங்கள் சராசரியாக 5,000 கிலோகிராம் முதல் 7,000 கிலோகிராம் வரை எடை இருக்கும் என்று டாக்டர் மார்க்கஸ் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles