செம்மணியில் மேலும் 16 எலும்புக் கூடுகள் அடையாளம்!

செம்மணி மனித புதைகுழியில் மேலும் 16 மனித எலும்புக் கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்டத்தின் 19 ஆம் நாள் அகழ்வு பணிகள் இன்று திங்கட்கிழமை நடைபெற்றன.

இதன்போது சிறுவர்களுடைய என்பு கூட்டு தொகுதிகள் உள்ளடங்கலாக 16 மனித என்புகூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

அத்துடன் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட என்பு கூட்டு தொகுதிகளில் 4 என்பு கூட்டு தொகுதிகள் இன்று முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அதன் அடிப்படையில் செம்மணி மனித புதைகுழியில் இதுவரையிலான கால பகுதியில் நடைபெற்ற அகழ்வு பணிகளின் போது 318 மனித என்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. 302 என்பு கூட்டு தொகுதிகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles