ஆழ்கடலின் விந்தைகளை வெளிச்சமிட்டுக் காட்டும் கலை அறிவியல் அருங்காட்சியகம்

Preserved crab specimen displayed in a dark exhibit case, viewed from above with claws extended at the sides.

ஆழ்கடலின் மர்மங்களையும் அதன் அதிசயங்களையும் நேரில் கண்டு ரசிக்கும் அரியதொரு வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறது சிங்கப்பூர் கலை அறிவியல் அருங்காட்சியகம் ஏற்பாடு செய்துள்ள கண்காட்சி.

சிங்கப்பூரின் கலை அறிவியல் அருங்காட்சியகம், உலக அளவில் கடல் ஆராய்ச்சியில் முன்னிலை வகிக்கும் ‘ஓஷன்எக்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து, மனிதக் கண்களுக்குப் தென்படாத ஆழ்கடலின் அதிசயங்களை முதன்முறையாக சிங்கப்பூருக்குக் கொண்டுவந்திருக்கிறது.

‘பெருங்கடலடிப் பயணம்’ என்ற தலைப்பிலான இக்கண்காட்சி ஜூன் 6 முதல் நவம்பர் 1 வரை நடைபெறுகிறது.

கலை, அறிவியல், நவீனத் தொழில்நுட்பம் ஆகியவற்றைக் கலந்து வியக்கத்தக்க வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கண்காட்சி, வருகையாளர்களுக்குக் கடலின் ஆழமான பகுதிகளைக் காண்பிக்கிறது.

“சில நேரங்களில் அறிவியல் கருத்துகளைப் புரிந்துகொள்வது கடினமாக இருக்கலாம். எனவே, கலைஞர்களுடன் இணைந்து அந்தக் கருத்துகளை வெளிப்படுத்த முயலும்போது அது எளிதில் புரிந்துகொள்ள உதவுகிறது,” என்று கலை அறிவியல் அருங்காட்சியகத்தின் இயக்குநர் ஏட்ரியன் ஜார்ஜ் கூறினார்

பார்வையாளர்களின் பயணம் ஓஷன்எக்ஸ் அமைப்பின் அதிநவீன ஆராய்ச்சி கப்பலான ‘ஆர்/வி பெருங்கடல் ஆய்கலம்’ தளத்திலிருந்து தொடங்குகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles