சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் வில்லியம்ஸன்!

நியூசிலாந்து அணியின் முன்னாள் தலைவர் கேன் வில்லியம்சன் அனைத்து வடிவ சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

உடன் அமுலாகும் வகையில் அவர் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2010 முதல் 2026 வரையான காலப்பகுதியில் 378 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள வில்லியம்சன், 48 சதங்கள் மற்றும் 6 இரட்டைச் சதங்கள் உட்பட மொத்தம் 19 ஆயிரத்து 346 ஓட்டங்களைக் குவித்து, நியூசிலாந்து வரலாற்றில் அனைத்து வடிவ போட்டிகளிலும் அதிக ஓட்டங்களை எடுத்த வீரராக ஓய்வு பெறுகிறார்.

இதேபோல், நியூசிலாந்து அணியின் மிகச்சிறந்த டெஸ்ட் துடுப்பாட்ட வீரரான இவர்இ 110 போட்டிகளில் விளையாடி 33 சதங்கள் உட்பட 54.06 என்ற சராசரியுடன் 9 ஆயிரத்து 515 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.

மூன்று வடிவ போட்டிகளிலும் நியூசிலாந்து அணியை வழிநடத்திய வில்லியம்சன், அவரது தலைமையின் கீழ் 2019 உலகக்கிண்ணம் மற்றும் 2021 இருபது – 20 உலகக் கிண்ணத் தொடர்களின் இறுதிப்போட்டிக்கு அணியை அழைத்துச் சென்றார்.

மேலும், 2021இல் நடைபெற்ற முதலாவது உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் பட்டத்தை நியூசிலாந்து அணி வென்றபோது அவரே அணியை வழிநடத்தினார்.

தனது ஓய்வு முடிவு குறித்து வில்லியம்சன் கூறுகையில். ‘நான் இதைப் பற்றி சில காலமாக சிந்தித்து வந்தேன். ஆனால், கடந்த சில நாட்களாகவே இதுதான் சரியான நேரம் என்பது தெளிவாகத் தெரிந்தது. சர்வதேச கிரிக்கெட்டுக்கான வலுவான உந்துதலையும் பசியையும் நான் எப்போதும் கொண்டிருந்தேன். நியூசிலாந்துக்காக நான் விளையாடிய ஒவ்வொரு போட்டியிலும் எனது முழுப் பங்களிப்பையும் வழங்கியுள்ளேன் என்பதை நினைத்துப் பெருமைப்படுகிறேன்.

அதற்கு குறைவான எதையும் தொடர்ந்து செய்வது சரியாக இருக்காது. எனது சொந்த விருப்பத்தின் பேரில் நான் விலகுவதை பாக்கியமாகக் கருதுகிறேன். இந்த அணி செல்லும் பாதை குறித்து நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன்’ – என்றார்.

கடந்த நவம்பர் மாதம் இருபது – 20 போட்டிகளில் இருந்து கேன் வில்லியம்சன் ஓய்வு பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles