காணாமல்போன நெடுந்தீவு மீனவர் நாகபட்டினம் கடற்கரையில் சடலமாக மீட்பு

நெடுந்தீவில் இருந்து மீன்பிடிக்க சென்ற மீனவர் இன்றையதினம் தமிழ்நாடு நாகபட்டினம் கடற்கரையோரத்தில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த மீனவர் கடந்த 11ஆம் திகதி நெடுந்தீவு பகுதியில் இருந்து கடற்றொழிலுக்காக சென்றிருந்த வேளை காணாமல் போயிருந்தார்.

இது குறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் விசாரணைகளுடன் தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில் இன்றையதினம் அவரது சடலம் தமிழகத்தின் நாகபட்டினம் கடற்கரையில் கரையொதுங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.

உரிய விசாரணைகளின் பின்னர் அவரது உடலத்தை இலங்கைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles