லண்டனில் நேருக்குநேர் ரயில்கள் மோதி விபத்து; ஒருவர் பலி! 100 பேர் காயம்!

பிரித்தானியாவின் லண்டன் நகரின் வடக்கு பகுதியில் இரண்டு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில், ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர் என பிரித்தானிய போக்குவரத்து பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெட்ஃபோர்ட் பகுதிக்கு தெற்கே அமைந்துள்ள ரயில் பாதையில், நேற்று (19) மாலை 5.15 மணியளவில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.

விபத்து நடந்தபோது, முன்னோக்கி தூக்கி எறியப்பட்டதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 11 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர் எனக் கூறப்படுகிறது.

அத்துடன் 22 பேர் பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் 56 பேருக்கு சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

விபத்து நடந்த பகுதிக்கு 20 இற்கும் மேற்பட்ட நோயாளர் காவு வாகனங்கள் சென்றதோடு வான்வழியாக விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் உட்பட பெருமளவிலான குழுக்கள் உடனடியாக விபத்து இடம்பெற்ற இடத்தை அடைந்து தீவிர மீட்புப் பணிகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்து எவ்வாறு நிகழ்ந்தது என்பது குறித்து கண்டறிய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு பொலிஸ் அதிகாரி ஸ்டூவர்ட் கண்டி தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles