செம்மணி மனித புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வுப் பணிகளின் போது, இன்றைய தினமும் 7 மனித எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளதுடன், மேலும் 11 எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
செம்மணி மனித புதைகுழியின் மூன்றாம் கட்ட அகழ்வுப் பணியின் 30ஆவது நாள் அகழ்வுப் பணிகள் இன்றைய தினம் (21) முன்னெடுக்கப்பட்டன. இதன்போதே இந்த எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
அதனடிப்படையில், இந்தப் பகுதியில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது மொத்தமாக 405 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவற்றில் 377 எலும்புக்கூடுகள் இதுவரையில் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
