முல்லைத்தீவு மாவட்டத்தில் யானை தாக்குதலுக்கு இலக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது
.
முல்லைத்தீவு குமுழமுனைப் பகுதியைச் சேர்ந்த இளைஞரான சர்விதன் நேற்று இரவு இத்திமடு கிராமத்தில் உள்ள தனது வயலுக்கு காவலுக்குச் சென்றிருந்த நிலையில் இன்று அதிகாலை வயலுக்குள் புகுந்த காட்டு யானை தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது
