ஈரான் விவகாரம் : செனட் உறுப்பினர்கள் மீது ட்ரம்ப் கடும் சாடல்!

ஈரான் தற்போது கடுமையான நெருக்கடி நிலையை எதிர்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிற்கு தேவையான அனைத்தையும் வழங்குவதற்கு ஈரான் தயாராக இருக்கும் இந்தச் சூழலில், அமெரிக்க செனட் சபையில் முன்வைக்கப்பட்டுள்ள போர் அதிகாரச் சட்டம் தொடர்பான வாக்கெடுப்பு தேவையற்றது என அவர் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், தனது நடவடிக்கைகளுக்கு தடையாக அமையும் வகையில் ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்து வாக்களித்த நான்கு குடியரசுக் கட்சி செனட்டர்களை டிரம்ப் கடுமையாக சாடியுள்ளார்.

அவர்களின் இந்த நடவடிக்கை ஈரானுக்கு சாதகமாக அமையக்கூடியதுடன், அமெரிக்காவின் எதிரிகளுக்கு ஆதரவளிப்பது போன்றதாக இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இந்த முடிவுகள் தனது பணிகளை மேலும் சவாலானதாக மாற்றியிருந்தாலும், குறித்த விவகாரத்தை வெற்றிகரமாக நிறைவு செய்வதில் தாம் உறுதியாக இருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு மற்றும் வெளிநாட்டு கொள்கை தொடர்பான முக்கிய தீர்மானங்கள் குறித்து அரசியல் வட்டாரங்களில் தொடர்ந்து விவாதங்கள் இடம்பெற்று வரும் நிலையில், டிரம்பின் இந்தக் கருத்துக்கள் கவனம் பெற்றுள்ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles