அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணை வழியாக இடம்பெறும் கடல் போக்குவரத்து படிப்படியாக சீரடைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியாவிற்கான முக்கிய சரக்குகளை ஏற்றிச் செல்லும் கப்பல்களின் இயக்கத்தை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
இதன்படி, இந்தியா நோக்கி பயணித்த 30 கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை பாதுகாப்பாகக் கடந்துள்ளதாக கப்பல் போக்குவரத்து அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அதேவேளை, இந்தியாவிற்குச் சொந்தமான மேலும் 26 கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்வதற்காக காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகாரிகள் வழங்கிய தகவலின்படி, மார்ச் 1 முதல் ஜூன் 14 வரை தினமும் 10 இற்கும் குறைவான கப்பல்களே இந்த நீரிணையைக் கடந்து சென்றிருந்தன.
எனினும், ஜூன் 15 முதல் தினசரி சராசரியாக 22 சரக்குக் கப்பல்கள் பாதுகாப்பாக கடந்து செல்வதாக பதிவாகியுள்ளது.
இதனால், அண்மைய நாட்களில் ஹோர்முஸ் நீரிணை வழியான கப்பல் போக்குவரத்து குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
