அடுத்த ஆண்டு இந்தியா செல்லவுள்ள அமெரிக்க ஜனாதிபதி!

அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அடுத்த ஆண்டு இந்தியாவுக்கு அரசுமுறைப் பயணம் ஒன்றை மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்க் ரூபியோ தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,”அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அடுத்த ஆண்டு இந்தியா வருவதற்கான ஆயத்தப் பணிகளில் நாங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருவதாகவும் அமெரிக்காவின் மிக நெருங்கிய நண்பனாகவும் , நட்பு நாடாகவும் இந்தியா திகழ்கிறது. என வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது ரூபியோ கூறியுள்ளார்.

இந்நிலையில்,, இரு தலைவர்களுக்கும் இடையிலான இந்த இணக்கம் இராஜதந்திர ரீதியாக மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

பிரான்சில் நடைபெற்ற ஜி7 மாநாட்டின் இடையே பிரதமர் மோடியும், ஜனாதிபதி ட்ரம்பும் சந்தித்துப் பேசியதை நினைவுகூர்ந்த அவர், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் மிகவும் அற்புதமானது மற்றும் வலிமையானது எனவும் கூற்றியுள்ளார்.

இந்த வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான இறுதிக்கட்டப் பணிகள் தற்போது சாத்தியமாக்கப்பட்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles