‘சுதந்திர பலஸ்தீனம் மலராது’ – இஸ்ரேல் பிரதமர் திட்டவட்டம்

சுதந்திர பலஸ்தீனம் உருவாவதற்கான வாய்ப்புகளைத் இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.

வரும் தேர்தல்களில் தான் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மத்திய தரைக்கடல் முதல் ஜோர்டான் ஆறு வரையிலான இடைப்பட்ட பகுதியில் இரண்டு தனித்தனி நாடுகள் அமைய இடமில்லை என்று அவர் அறிவித்துள்ளார்.

தேசியப் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைக் கருத்தில் கொண்டு, இறையாண்மை கொண்ட பாலஸ்தீன நாட்டை அவர் முழுமையாக எதிர்க்கிறார் என்பது இதன்மூலம் உறுதியாகின்றது.

இஸ்ரேல் மக்கள் இது விடயத்தில் தனது பக்கமே இருக்கின்றனர் என நெதன்யாகு நம்புகின்றார்.

இந்த அறிவிப்பு இப்பகுதியின் எதிர்கால அரசியல் தீர்வுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, ஈரான் மற்றும் அமெரிக்காவுக்கிடையில் மீண்டும் ஏற்பட்டுள்ள மோதலானது, பிராந்தியத்தில் பெரும் பதற்ற நிலையில் ஏற்படுத்தியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles