ஹோர்முஸ் நீரிணை அடுத்த 30 நாட்களுக்கு முழுமையாக ஈரானின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்று அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார்.
ஹோர்முஸ் நீரிணைக்கு ஏற்படும் எந்தவொரு சவாலும் ‘பதற்றங்களை அதிகரிக்கும்’ என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
அனைத்து தடைகளும் அகற்றப்பட்ட பிறகு, அந்த நீர்வழியின் முழு கொள்ளளவும் மீட்டெடுக்கப்படும். இதற்காகத்தான் நாங்கள் பணியாற்றி வருகிறோம், என்று அப்பாஸ் அராக்சி மேலும் கூறியுள்ளார்.
இந்தப் பொறுப்பு ஈரான் இஸ்லாமியக் குடியரசையே சாரும். இந்த விஷயத்தில் வேறு எந்தக் கட்சிக்கோ அல்லது நாட்டிற்கோ பங்கு கிடையாது என அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்த மாத தொடக்கத்தில் கையெழுத்திடப்பட்ட இடைக்கால அமைதி ஒப்பந்தங்களுக்கு மத்தியல் மத்திய கிழக்கு பகுதியில் மோதல் நீடித்து வருகின்றது. இந்நிலையில் அப்பாஸ் அராக்சியின் கருத்து மேலும் போர் பதற்றத்தை அதிகரித்துள்ளது.
