காஸாவில் இஸ்ரேல் நடத்திய டிரோன் தாக்குதலில் மூவர் பலி!

மத்திய காஸா பகுதியில் இடம்பெயா்ந்த பலஸ்தீன மக்கள் தங்கியிருந்த தற்காலிக முகாம் மீது இஸ்ரேல் ராணுவம் திங்கட்கிழமை(29) நடத்திய டிரோன் தாக்குதலில் 8 வயது சிறுவன் உட்பட 3 போ் கொல்லப்பட்டனா். சிறுவனின் தாய் உட்பட 7 போ் காயமடைந்தனா்.

ஆயுதமேந்திய பயங்கரவாதி ஒருவரைக் குறிவைத்தே இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

அதேநேரம், காஸாவில் கடந்த ஒக்ரோபரில் போா்நிறுத்தம் அமுலுக்கு வந்தபோதிலும், இஸ்ரேல் ராணுவம் நாள்தோறும் தொடா்ச்சியாக நடத்தி வரும் தாக்குதல்களில் இதுவரை 360இற்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள் உள்பட 1,045 பலஸ்தீனா்கள் கொல்லப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles