ஒரே இரவில் கோடீஸ்வரர்களாகிய கனேடிய தம்பதி

மீன் பிடிப்பதில் ஆர்வம் கொண்ட ஒரு கனேடிய தம்பதி, மீன் பிடித்துவிட்டு வீடு திரும்பிய நிலையில், தாங்கள் கோடீஸ்வரர்களாகிவிட்ட செய்தி அவர்களுக்காக காத்திருந்தது.

கனடாவின் கியூபெக்கிலுள்ள Montérégie பகுதியில் வாழும் ஜோசப், மைலீன் தம்பதியர் மீன் பிடிப்பதில் ஆர்வம் கொண்டவர்கள்.

சமீபத்தில், வழக்கம்போல மீன் பிடிக்கும் ட்ரிப் ஒன்றிற்கு சென்றுவிட்டு வீடு திரும்பிய தம்பதியருக்கு மொபைலில் ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது.

அது, அவர்கள் வாங்கிய அதிர்ஷ்டலாப சீட்டுக்கு 40 மில்லியன் டொலர்கள் பரிசு விழுந்துள்ளது என்பதுதான்.

40 மில்லியன் கனேடிய டொலர்கள் என்பது இலங்கை மதிப்பில் 9,43,91,48,604.00 ரூபாய் ஆகும்.

ஜோசப், மைலீன் தம்பதியர் ஏற்கனவே நீண்ட தூரம் படகில் பயணித்து மீன் பிடிப்பதில் ஆர்வம் கொண்டவர்கள் என்பதால், மேலும் பல ட்ரிப்கள் செல்ல திட்டமிட்டுள்ளதுடன், ஒரு வீடும் ஒரு படகும் வாங்க திட்டமிட்டுவருகிறார்கள்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles