பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் லெப்டினன்ட் ஜெனரல் முகமட் அலி, இலங்கை பாதுகாப்புச் செயலாளர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்தாவை மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.
6ஆவது பாகிஸ்தான்-இலங்கை ஆயுதப் படைகளின் பாதுகாப்பு உரையாடலில் பங்கேற்பதற்காக கொழும்பு வந்த லெப்டினன்ட் ஜெனரல் முகமட் அலி, பாதுகாப்பு அமைச்சின் தலைமையகத்தில், இலங்கை பாதுகாப்பு செயலாளரைச் சந்தித்துள்ளார்.
இந்தக் கலந்துரையாடல்களின்போது, இரு பாதுகாப்பு அதிகாரிகளும், நடைபெற்றுவரும் பாதுகாப்பு உரையாடல், இராணுவ ஒத்துழைப்பு, பயிற்சி வாய்ப்புகள், பாதுகாப்புப் பரிமாற்றங்கள் மற்றும் பரஸ்பர மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் உள்ளிட்ட பல்வேறு இருதரப்பு விடயங்கள் குறித்து ஆலோசனை நடத்தியுள்ளனர்.
இந்தச் சந்திப்பில் பாகிஸ்தானின் கூடுதல் பாதுகாப்புச் செயலாளர் ரியர் அட்மிரல் அமீர் மஹ்மூத், சிறிலங்காவுக்கான பாகிஸ்தான் தூதுவர் மேஜர் ஜெனரல் நய்யார் நசீர் மற்றும் பாதுகாப்பு ஆலோசகர் கேணல் முகமட் பாரூக் ஆகியோரும் உடனிருந்தனர்.
