சொகுசு கப்பலில் பரவிய நோரோ வைரஸ்- 125 பேர் பாதிப்பு

புளோரிடா மாகாணத்திலிருந்து ஆயிரக்கணக்கான பயணிகளுடன் கரீபியன் தீவுகளை நோக்கிப் புறப்பட்ட “ரூபி பிரின்சஸ்” என்ற சொகுசு கப்பலில் திடீரென ‘நோரோ வைரஸ்’ தொற்று பரவியுள்ள நிலையில், கப்பலில் இருந்த 125 பேர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்கள் 20 நாட்கள் பயணத்தின்போது 102 பயணிகள் மற்றும் 23 ஊழியர்கள் என மொத்தம் 125 பேருக்கு கடுமையான வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் இது உணவு நச்சுத்தன்மை என கருதப்பட்டது. ஆனால், அடுத்த சில மணி நேரங்களிலேயே பாதிப்பு மின்னல் வேகத்தில் உயர்ந்ததை அடுத்து, கப்பல் மருத்துவக் குழுவினர் நடத்திய பரிசோதனையில் இது மிக மோசமாக பரவக்கூடிய ‘நோரோ வைரஸ்’ தொற்று என்பது உறுதி செய்யபட்டுள்ளது.

இந்நிலையில்,பாதிக்கப்பட்ட அனைவரும் கப்பலில் உள்ள தனி அறைகளில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டுள்ளது.

தற்போது இந்த சொகுசு கப்பல் சான் பிரான்சிஸ்கோவில் தனிமைப்படுத்தப்பட்டு, ஊழியர்கள் மூலம் முழுமையாக கிருமி நீக்கம் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles