திருப்பதியில் ஜூன் மாதம் 1.26 கோடி லட்டுகள் விற்று சாதனை

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த ஜூன் மாதம் சாதனை அளவாக 1.26 கோடி லட்டு பிரசாதம் விற்பனையாகியுள்ளது.

ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனத்திற்கு பிறகு பக்தர்கள் லட்டு பிரசாத கவுன்டரை நோக்கி படையெடுப்பது வழக்கமாக உள்ளது. இந்த லட்டு பிரசாதம் அதன் சுவைக்காக மட்டுமல்லாமல் அது புனிதமான ஒரு திருத்தலத்தில் இருந்து வந்தது என்பதால் அதற்கென ஒரு தனித்துவம் காலம் காலமாக உள்ளது.

இந்நிலையில் இந்த லட்டு பிரசாதம் கடந்த ஏப்ரல் மாதம் 1,11,96,170 என்ற எண்ணிக்கையில் விற்பனையாகி சாதனை படைத்தது. அதன் பின்னர், கடந்த மே மாதத்தில் இந்த எண்ணிக்கை 1,21,35,528 ஆக வரலாறு படைத்தது. இப்போது புதிய சாதனையாக கடந்த ஜூன் மாதத்தில் 1,26,81,805 லட்டு பிரசாதம் விற்பனையாகியுள்ளது.

கடந்த ஜூன் மாதத்தில் பக்தர்களின் வருகை மிக அதிகமாக இருந்ததால் இந்த சாதனை நிகழ்ந்துள்ளதாக தேவஸ்தான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதே 2024 ஜூன் மாதத்தில் 1,02,64,364 லட்டு பிரசாதம் விற்பனையானது. 2025 ஜூனில் 1,19,21,355 லட்டுகள் விற்பனையானது. தற்போது 2026 ஜூன் மாதத்தில் 1,26,81,805 லட்டுகள் விற்பனையாகி புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. இது கடந்த 2025, ஜூன் மாத விற்பனையை விட 7,59,452 லட்சம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles