யாழில் வாள்வெட்டு; மூவர் படுகாயம்! கிளிநொச்சியிலிருந்து வந்த கும்பல் அட்டகாசம்!!

யாழ்ப்பாணம், நாவாந்துறைப் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாமுக்கு மிக அருகில் உள்ள வீடொன்றுக்குள் புகுந்த வன்முறைக் கும்பல் ஒன்று நடத்திய துணிகர வாள்வெட்டுத் தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.

இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த மூவரும் உடனடியாக மீட்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி தெரியவருவதாவது:-

நாவாந்துறைப் பகுதியில் உள்ள இராணுவ முகாமுக்கு அருகில் வசிக்கும் குடும்பத்தினருக்கும், கிளிநொச்சி – நாச்சிக்குடா பகுதியைச் சேர்ந்த சிலருக்கும் இடையில் நீண்டகாலமாகத் தனிப்பட்ட தகராறு நிலவி வந்துள்ளது.

இந்தப் பகைமையின் காரணமாக, இன்று அதிகாலை கிளிநொச்சியிலிருந்து ‘பட்டா’ ரக வாகனமொன்றில் ஆயுதங்களுடன் வந்த நாச்சிக்குடா பகுதியைச் சேர்ந்த வன்முறைக் கும்பலே, நாவாந்துறையில் உள்ள அந்த வீட்டுக்குள் அதிரடியாகப் புகுந்து இந்த வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. தாக்குதலை நடத்திய பின்னர் அந்தக் கும்பல் வந்த வாகனத்திலேயே தப்பிச் சென்றுள்ளது.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தலைமறைவாகியுள்ள நாச்சிக்குடா கும்பலைச் சேர்ந்த சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான விசேட நடவடிக்கைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் முடுக்கிவிட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles