வவுனியா, புளியங்குளம் எரிபொருள் விற்பனை நிலையத்துக்கு முன்பாகவுள்ள பாதசாரி கடவையில் வீதியைக் கடக்க முயன்ற நபர் ஒருவர், இரு வாகனங்கள் அடுத்தடுத்து மோதியதில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். நேற்று இரவு 8 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி அதிவேகமாகப் பயணித்த ஹயஸ் ரக வாகனம் ஒன்று, பாதசாரி கடவையில் வீதியைக் கடந்து கொண்டிருந்த 55 வயது மதிக்கத்தக்க நபர் மீது மோதியுள்ளது. இந்த மோதலில் தூக்கி வீசப்பட்ட அதே நபர் மீது, யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா நோக்கி அதிவேகமாக வந்த கார் ஒன்று மோதியதுடன், காரின் சக்கரங்கள் அவர் மீது ஏறிச் சென்றுள்ளன.
இந்தக் கோர விபத்தில் பலத்த காயங்களுக்குள்ளான மேற்படி நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
விபத்து குறித்துத் தகவலறிந்த புளியங்குளம் பொலிஸார், சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணைகளை முன்னெடுத்தனர்.
பாதசாரி கடவையில் இடம்பெற்ற இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
