இங்கிலாந்தின் எடின்பரோவின் பிரின்சஸ் தெருவில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க டெபென்ஹாம்ஸ் (Debenhams) கட்டடத்தில் இன்று பெரும் தீவிபத்து ஏற்பட்டுள்ளது.
அதிகாலை 2:52 மணிக்கு தீவிபத்து தொடர்பில் அவசர சேவையினர் அழைக்கப்பட்டனர்.
காலை 6:45 மணிக்குள் ஏழு தீயணைப்பு வாகனங்களும் மூன்று சிறப்பு உபகரணங்களும் சம்பவ இடத்திற்கு வந்தடைந்தன.
இந்நிலையில் காலை 08.00 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் தீ முற்றிலுமாக கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
அத்துடன் தீவிபத்தில் கட்டிடத்தின் சில பகுதிகள் நாசமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதேநேரம் உயிரிழப்புகள் அல்லது காயங்கள் தொடர்பான விபத்துகள் ஏற்படவில்லை எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் தீவிபத்துக்கான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
