சொந்த நாட்டின் விமான நிலையத்தையே தாக்கிய ஏமன்

ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் சனா நகரில் அமைந்துள்ள சனா சர்வதேச விமான நிலைய ஓடுதளம் மீது ஏமன் ராணுவம் தாக்கியுள்ளது.

ஏமன் அரசின் ராணுவம் மற்றும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இடையே நாட்டின் முக்கிய உள்கட்டமைப்புகளை கைப்பற்றுவதில் உள்நாட்டு போர் இருந்து வருகிறது. ஈரான் போர் நடந்துகொண்டிருக்கும் இந்த சமயத்தில் ஹவுதிக்கள் ஈரானுக்கு ஆதரவாகவும் ஏமன் அரசு எதிராகவும் இருந்து வருகிறது.

இந்நிலையில் ஹவுதிக்கள் கட்டுப்பாட்டில் உள்ள சனா சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்க முயன்ற ஈரானிய விமானத்தை தடுப்பதற்காக ஏமன் அரசுப் படைகள் அதன் ஓடுதளத்தின் மீது குண்டுவீசித் தாக்கியுள்ளன.

இந்தத் தாக்குதலால் சனா விமான நிலையத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக முடங்கின. இதனையடுத்து, அந்த ஈரானிய விமானம் செங்கடலின் மேற்கு கடற்கரையில் உள்ள அல் ஹுதைதா விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டு, அங்குப் பத்திரமாக தரையிறங்கியதாக ஈரானிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சனாவைப் போலவே அல் ஹுதைதா பகுதியும் ஹவுதி கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. ஏமன் ராணுவத்தின் தாக்குதல் குறித்து பேசிய ஹவுதி அமைப்பின் ராணுவ செய்தி தொடர்பாளர் யஹ்யா சாரி, சனா விமானம் நிலையம் மீதான தாக்குதலுக்கு தகுந்த பதிலடி தரப்பும் என சூளுரைத்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles