மோசமான நிலையில் ரொறன்ரோவின் காற்றுத் தரம்!

ரொறன்ரோ நகரைத் தகித்து வரும் பல நாள் நீடித்த வெப்ப அலைக்கு மத்தியில், நகரின் காற்றுத் தரம் உலகின் மிக மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

உலகளாவிய காற்றுத் தரவு அமைப்பான ‘IQAir’ வெளியிட்டுள்ள தகவலின்படி, உலகளவில் மிக மோசமாக மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் ரொறன்ரோ 30ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

இதற்கிடையில், கனடா சுற்றுச்சூழல் அமைப்பின் காற்றுத் தர சுகாதாரக் குறியீடு (AQHI), ரொறன்ரோவின் காற்றை ‘நிலை 5’ (Level 5) அல்லது மிதமான அபாயகரமான பிரிவில் வகைப்படுத்தியுள்ளது.

வெப்ப அலை காரணமாக உருவாகியுள்ள வெப்பமான மற்றும் ஈரப்பதமான காற்று, காற்றுத் தரத்தை மேலும் மோசமடையச் செய்யலாம் என்று தேசிய வானிலை நிறுவனம் ஏற்கனவே எச்சரித்திருந்தது.

தற்போது நம்மைப் பாதித்து வரும் உயர் அழுத்த மண்டலம் காரணமாக, வளிமண்டலத்தில் காற்று கீழ்நோக்கி அமிழும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த கீழ்நோக்கிய காற்று வளிமண்டல மட்டங்களில் தலைகீழ் மாற்றங்களை உருவாக்குகிறது என தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, வெப்பமான காற்று வளிமண்டலத்தின் மேல்நோக்கி உயர முடியாமல் தடுக்கப்பட்டு, மாசுகள் அனைத்தும் வளிமண்டலத்தின் கீழ் அடுக்குகளிலேயே சிக்கிக் கொள்கின்றன. இதுவே காற்றுத் தரம் மோசமடையக் காரணமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles