சொகுசு பேருந்து மோட்டார் சைக்கிளை மோதியதில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
யாழ்ப்பாணம் – புங்குடுதீவு – மடத்துவெளி பகுதியில் இன்று 6ஆம் திகதி புதன்கிழமை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாணம் நகரின் தனியார் விடுதி ஒன்றின் பேருந்தே இவ்வாறு விபத்தை ஏற்படுத்தியது. இதில், புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த சிறீரமணன் நிதுசன் என்பவரே உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் ஊர்காவற்றுறை பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
