உணவு லொறியில் ஒளிந்து சென்ற டிரம்ப்; ஈரானிய ஊடகங்கள் கேலி

அண்மையில் துருக்கியில் நடைபெற்ற நேட்டோ (NATO) உச்சிமாநாட்டின் போது, ஈரானின் ஏவுகணைத் தாக்குதல் அச்சுறுத்தலுக்குப் பயந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ‘ஏர் ஃபோர்ஸ் வன்’ (Air Force One) விமானத்திலிருந்து உணவு விநியோக லொறியில் (Catering Truck) ரகசியமாகத் தப்பிச் சென்ற சம்பவத்தை ஈரானிய அரசு ஊடகங்கள் கிண்டலடித்துள்ளன.

ஈரானின் ராணுவ வலிமையைக் கண்டு ட்ரம்ப் அஞ்சி நடுங்குவதையே இந்நிகழ்வு வெளிப்படுத்துவதாகத் தெஹ்ரான் தொலைக்காட்சிகள் கடுமையாக விமர்சித்துள்ளன.

துருக்கியில் ட்ரம்ப் தங்கியிருந்த ஹோட்டல் மற்றும் அவரது விமானத்தின் நடமாட்டங்களை ஈரானிய உளவுத்துறை துல்லியமாகக் கண்காணித்ததைத் தொடர்ந்து, அமெரிக்க ரகசியச் சேவை அதிகாரிகள் ட்ரம்பை உணவு லொறி மூலம் மற்றொரு சிறிய இராணுவ விமானத்திற்கு மாற்றினர்.

இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்ட ஈரானிய ஊடகங்கள், “ஈரானின் அச்சுறுத்தலால் ட்ரம்ப் உணவு லொறியில் ஒளிந்து தப்பியுள்ளார், இது அமெரிக்காவிற்கு நேர்ந்த மாபெரும் அவமானம்” எனக் கூறிப் புகைப்படங்கள் மற்றும் மீம்ஸ்களைப் (Memes) பகிர்ந்து கேலி செய்து வருகின்றன.

அதேவேளையில், ஹோர்முஸ் நீரிணை சர்வதேசக் கடல் பாதையைத் தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகக் கூறிவரும் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வாதத்திற்கு ஈரான் கடும் மறுப்புத் தெரிவித்துள்ளது.

அதேசமயம் ஹோர்முஸ் ஜலசந்தி முற்றிலும் அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளது” என்ற ட்ரம்பின் அறிக்கையைத் தள்ளுபடி செய்துள்ள ஈரானியப் புரட்சிப் படை (IRGC) அதிகாரிகள், அப்பகுதியில் அமெரிக்கக் கடற்படையின் அதிகாரம் செல்லாது என்றும், கடல்சார் வான்வெளியும் கடல் பாதையும் தங்களது முழுக் கண்காணிப்பில் தான் இயங்கி வருகிறது என்றும் பதிலடி கொடுத்துள்ளனர்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர்ச் சூழல் நிலவி வரும் நிலையில், இரு நாடுகளுக்கும் இடையே நடைபெற்று வரும் இந்தச் சொல்லம்புப் போர் உலக நாடுகளிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந் நிலையில் ட்ரம்பின் பாதுகாப்பு விவகாரத்தை ஈரான் சர்வதேச அளவில் பகிரங்கமாகக் கேலி செய்து வருவது, அமெரிக்க அரசு மற்றும் வெள்ளை மாளிகை வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles