இத்தாலியின் சிசிலி தீவில் அமைந்துள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலையான மவுண்ட் எட்னா மீண்டும் வெடித்துச் சிதறி வருகின்றது.
எரிமலையில் இருந்து நெருப்புக் குழம்புகள் வெளியேறுவதுடன், கொதித்துக் கொண்டிருக்கும் பாறைகள் மற்றும் கற்கள் மலையிலிருந்து உருண்டு விழுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எட்னா எரிமலையில் இருந்து வெளியேறும் சாம்பல் மற்றும் புகை காரணமாக சிசிலி விமான நிலையத்தில் விமான சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் விமானப் பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளனர்.
எட்னா எரிமலை கடந்த ஆண்டும் ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் பலமுறை வெடித்ததுடன், அப்போது வெளியான சாம்பல் பல கிலோமீற்றர் தொலைவுக்கு பரவியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
