‘ஃபிளை துபாய்’ துணை விமானிக்கு மரண தண்டனை விதிக்கப்பட வாய்ப்பு

‘ஃபிளை டுபாய்’ பயணிகள் விமானத்தில் இந்திய விமானி ஸ்மித் மச்சாரை தாக்கிய ஓமனை சேர்ந்த துணை விமானி ஹமாம் அல் ஹமாமி, விமானத்தை தகர்க்க திட்டமிட்டார் என வாக்குமூலம் அளித்துள்ளார்.

இந்நிலையில், இந்த குற்றத்துக்காக அவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்ற கடுமையான நடவடிக்கையை ஐக்கிய அரபு அமீரகம் எடுப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த தகவலை இஸ்ரேல் நாட்டின் செய்தி நிறுவனம் ஒன்று செய்தியாக வெளியிட்டுள்ளது. தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தின் பிடியில் உள்ள துணை விமானி ஹமாம் அல் ஹமாமியிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் இஸ்ரேல் பாதுகாப்பு அதிகாரிகள் பங்கெடுத்துள்ளனர் எனவும் தகவல்.

பரபரப்பு வாக்குமூலம்

“அவர் விமானத்தை தகர்க்க திட்டமிட்டார். மரணம் குறித்த அச்சம் அவருக்கு இல்லை” என்று சவூதி அரேபியா போலீஸாரிடம் அவர் வாக்குமூலம் அளித்தார் என அமெரிக்க செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டது. இந்த சூழலில்தான் துணை விமானி ஹமாம் அல் ஹமாமிக்கு மரண தண்டனை என்ற கடுமையான நடவடிக்கையை ஐக்கிய அரபு அமீரகம் நாடுவதாக தகவல் கிடைத்துள்ளது.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles