ஜூலையிலேயே சதி! கட்டடம் அல்லது விமானத்தின் மீது மோத திட்டம்!! – துணை விமானி வாக்குமூலம்

பயங்கரவாத சதித் திட்டத்துடன்தான் தான் விமானியாக பணியில் சேர்ந்ததாகவும், ஜூலையிலேயே இந்த சதித் திட்டத்தை தீட்டியதாகவும் ஃப்ளைடுபாய் துணை விமானி வாக்குமூலம் கொடுத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

துபையில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகருக்கு கடந்த வாரம் புதன்கிழமை புறப்பட்ட ஃப்ளைடுபாய் விமானத்தில் இந்திய விமானி ஸ்மித் மச்சாரை கத்தியால் குத்திய சக விமானி (ஓமனைச் சோ்ந்த ஹமாம் அல்-ஹம்மாமி, விமானத்தை கீழே வீழ்த்தும் முயற்சியில் ஈடுபட்டக் குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். படுகாயம் அடைந்தபோதும் எதிா்த்துப் போராடி பயணிகள்-ஊழியா்கள் உதவியுடன் அந்த முயற்சியை முறியடித்தாா் இந்திய விமானி ஸ்மித் மச்சார்.

இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்திய நிலையில், துணை விமானி ஹம்மாமி குறித்து வெளியான பல்வேறு தகவல்களும் அவர் அளித்த வாக்குமூலமும் விசாரணையில் திடுக்கிடும் வகையில் உள்ளன.

டெல் அவிவ் நகருக்குச் சென்றுகொண்டிருந்த ஃப்ளைடுபாய் விமானத்தை விபத்துக்குள்ளாக்க முயன்ற ஹம்மாமி, இஸ்ரேலின் பென் குரியன் விமான நிலையத்தின் மீதே அதை மோதச் செய்யத் திட்டமிட்டிருந்தார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கைது செய்யப்பட்டுள்ள ஓமன் நாட்டைச் சேர்ந்த ஹமாம் அல்-ஹம்மாமி, ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள விசாரணை அதிகாரிகளிடம் அளித்த வாக்குமூலத்தில், விமானத்தின் கேப்டன் ஸ்மித் மச்சரை கொன்றுவிட்டு, சந்தேகம் ஏதும் ஏற்படாத வகையில் விமானக் கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்புகொண்டு விமானம் தரையிறங்க அனுமதி பெற்றுவிட்டு, 9/11 தாக்குதலைப் போல விமான நிலையத்திலுள்ள ஒரு கட்டடம் அல்லது மற்றொரு விமானத்தின் மீது அந்த விமானத்தை மோதச் செய்ய திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

தனது சதிதிட்டம் முழுக்க முழுக்க இந்திய விமானியின் எதிர்தாக்குதல், படுகாயமடைந்தும் விட்டுக் கொடுக்காமல் விமானத்தைக் காக்க போராயது போன்றவற்றால் நாசமானதாகவும் குறிப்பிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தான், இந்த திட்டத்தை ஜூலையிலேயே நடத்தவிருந்த நிலையில், விமானி ஒருவருடன் நட்பு ஏற்பட்டுவிட்டதால் அதனை தள்ளிப்போட்டதாகவும் கூறியிருக்கிறாராம்.

பல முறை இஸ்ரேல் சென்றுவந்துள்ளதும், சதி திட்டத்தை நிறைவேற்றவே விமானியாக சேர்ந்ததும், சொந்த நாட்டிலேயே இவர் விமானியாக செயல்பட தடை விதிக்கப்பட்டிருந்ததும் இவரது சமூக வலைத்தளப் பதிவுகள் மூலம் இவர் தீவிரவாத கருத்துகளைக் கொண்டிருந்தார் என தெரிய வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles