வவுனியா, செட்டிகுளம் – மெனிக்பாம் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் என்று செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மதவாச்சியிலிருந்து மன்னார் நோக்கிப் பயணித்த பஸ் ஒன்றும், அதே திசையில் மெனிக்பாம் நோக்கிச் சென்று கொண்டிருந்த சைக்கிளும் ஒன்றோடொன்று மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இன்று இடம்பெற்ற இந்த விபத்தில் கடுமையான காயங்களுக்குள்ளான சைக்கிளைச் செலுத்திச் சென்றவராக பெரியதம்பனைப் பகுதியைச் சேர்ந்த அருளப்பன் அருள்ராஜ் என்ற இளைஞர் என்ற சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
விபத்து தொடர்பாக பஸ்ஸின் சாரதி செட்டிகுளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளைச் செட்டிகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
