ஓ.எம்.பி. நிகழ்வைக் கண்டித்து யாழில் மாபெரும் போராட்டம்! – பொலிஸார் அராஜகம்

Crowd of people behind a decorative black gate holding up portraits, likely protesting or demanding attention for a person pictured in the photos.

Police officers in brown uniforms assist distressed woman sitting on steps outside a building while bystanders film the scene with smartphones.

காணாமல்போன ஆள்கள் பற்றிய அலுவலகத்தின் (ஓ.எம்.பி.) ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம் எனவும், இராணுவத்தினரின் கையில் ஒப்படைக்கப்பட்ட எமது உறவுகளுக்கு என்ன நடந்தது? எனக் கோரியும் வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் இன்று செவ்வாய்க்கிழமை மாபெரும் கவனவீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

சர்வதேச காணாமல்போனோர் தினத்தை முன்னிட்டு, யாழ். மாவட்ட செயலகக் கேட்போர் கூடத்தில் காணாமல்போன ஆள்கள் பற்றிய அலுவலகத்தின் ஏற்பாட்டில் இன்று நடைபெற்ற நிகழ்வைக் கண்டித்தே, வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். மாவட்ட செயலகம் முன்பாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

உள்நாட்டு பொறிமுறையை வலுப்படுத்தும் காணாமல்போன ஆள்கள் பற்றிய அலுவலகத்தின் இழப்பீடும் வேண்டாம், மரண சான்றிதழும் வேண்டாம் என்பதை வலியுறுத்தியே இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பொலிஸார் அராஜகங்களைப் புரிந்தனர். எனினும், அவர்கள் சளைக்காமல் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.

இதேவேளை, சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு, வடக்கு – கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் ஏற்பாட்டில் எதிர்வரும் 30ஆம் திகதி சர்வதேச மாநாடொன்றும் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles