ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு 100% வரி – டிரம்பின் சட்டமூலத்தால் சர்ச்சை

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் மற்றும் எரிசக்தி பொருட்களை கொள்முதல் செய்யும் இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு 100 சதவீதம் வரை கூடுதல் வரி விதிக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கு அதிகாரம் வழங்கும் சட்டமூலம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த சட்டம் அமுலுக்கு வந்தால், ரஷ்யா மீதான பொருளாதார அழுத்தம் மேலும் அதிகரிக்கும். இதனால் உக்ரைன் போருக்கான அமைதிப் பேச்சுவார்த்தைகள் பாதிக்கப்படக்கூடும் என ரஷ்யா எச்சரித்துள்ளது.

கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ், ரஷியா மீது கூடுதல் தடைகள் விதிப்பது அமைதிப் பேச்சுவார்த்தைகளை மேலும் கடினமாக்கும் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அமெரிக்காவின் நடவடிக்கைக்கு சீனாவும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

ரஷ்யாவுடனான வர்த்தகத்தில் மூன்றாம் தரப்பான அமெரிக்கா தலையிடுவதையும், பிற நாடுகளின் மீது தனது அதிகார வரம்பை விரிவுபடுத்துவதையும் ஏற்க முடியாது என சீன வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, குறித்த சட்டமூலத்துக்கு டிரம்ப் இறுதி ஒப்புதல் அளிப்பாரா என்பதும், ஒப்புதல் கிடைத்தால் எந்த நாடுகளுக்கு எதிராக இந்த வரி அதிகாரம் பயன்படுத்தப்படும் என்பதும் அடுத்தகட்ட முக்கிய விடயமாகியுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles