வெள்ளை மாளிகையில் பிரமாண்ட மண்டபம் அமைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி

வெள்ளை மாளிகையில் 400 மில்லியன் டொலர் மதிப்பிலான பிரம்மாண்ட பிரதான மண்டபம் கட்டும் பணியை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து மேற்கொள்வதற்கு அமெரிக்க உச்ச நீதிமன்றம் 5-4 என்ற பெரும்பான்மைத் தீர்ப்பின் மூலம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்தத் திட்டத்தின் தரைக்கு மேலான பகுதி கட்டுமானங்களை நிறுத்தியிருக்கக்கூடிய கீழ் நீதிமன்றத் தீர்ப்புகளை ரத்து செய்யக்கோரி ட்ரம்ப் நிர்வாகம் சமர்ப்பித்த அவசரகாலக் கோரிக்கையை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

காங்கிரஸின் நேரடி அனுமதியின்றி வெள்ளை மாளிகையின் வரலாற்றுச் சிறப்புமிக்க கிழக்குப் பகுதியை இடித்து இந்தக் கட்டுமானத்தை மேற்கொள்வது சட்டவிரோதமானது என வாதிட்டு ‘வரலாற்றுப் பாதுகாப்புக்கான தேசிய அறக்கட்டளை’ தொடர்ந்த வழக்கை நிராகரித்து இந்தத் தீர்ப்பு வெளியாகியுள்ளது.

தலைமை நீதிபதி மற்றும் 3 தாராளவாத நீதிபதிகள் இந்தத் திட்டத்திற்கு எதிராகத் தங்கள் மாறுபட்ட கருத்துக்களைப் பதிவு செய்த போதிலும், பெரும்பான்மை நீதிபதிகள் ட்ரம்ப் நிர்வாகத்தின் அவசரகால வாதத்திற்கு ஆதரவாகத் தீர்ப்பளித்துள்ளனர்.

இந்த நிலையில் வெள்ளை மாளிகைக்கு ஒரு பெரிய நிகழ்ச்சி அரங்கம் தேவை என்றும், அது தனது பாதுகாப்பிற்கு மிகவும் முக்கியமானது என்றும் ட்ரம்ப் நீண்டகாலமாக வாதிட்டு வருகிறார்.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவைத் தொடர்ந்து, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வளாகத்தில் பிரதான மண்டபக் கட்டுமானப் பணிகள் எந்தவிதத் தடையுமின்றித் தொடர்ந்து நடைபெறவுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles