சிரிய எல்லையில் ஜோர்தான் விமானங்கள் தாக்குதல் – 20 பயங்கரவாதிகள் பலி!

சிரியா நாட்டின் எல்லைக்குள் புகுந்த ஜோர்தான் நாட்டு வான்படை விமானங்கள், பதுங்கியிருந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளின் முகாம்களை குறிவைத்து குண்டுமழை பொழிந்தன.

உளவுத்தகவல்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட இந்த வான்வழி தாக்குதலில், 20 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர் என ஜோர்டான் அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

ஜோர்தானின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள கராக் நகரில் உள்ள ஒரு கிரேக்க தேவாலயத்தில் கடந்த வாரம் இறுதிச்சடங்கு ஒன்று நடந்து கொண்டிருந்தது.

அப்போது அங்கு புகுந்த ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கி சூடு நடத்தினர்.

இந்த பயங்கர தாக்குதலில் 9 அப்பாவி பொதுமக்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து, தாக்குதல் நடத்திய 3 பயங்கரவாதிகளை ஜோர்தான் பாதுகாப்பு படையினர் கைது செய்தனர்.

இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பழிதீர்க்கும் நடவடிக்கையாகவே குறித்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles