இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஆகியோருக்கிடையில் இன்று தொலைபேசி வாயிலாக அவசர கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த உரையாடலின் போது, இருவரும் விரைவில் அமெரிக்காவில் நேரில் சந்திக்க இணக்கம் தெரிவித்துள்ளனர்.
எனினும், இந்த முக்கிய சந்திப்பு எப்போது நடைபெறும் என்பது குறித்த துல்லியமான திகதிஇன்னும் அறிவிக்கப்படவில்லை.
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டு தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் கமேனிக்கு இறுதி சடங்கு இடம்பெற்றும்வேளை, இரு நாட்டுத் தலைவர்களுக்கிடையிலான இந்தத் தொடர்பு, உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
