ஹோர்முஸ் நீரிணை வரி விதிப்பிலிருந்து பின்வாங்கினார் ட்ரம்ப்

ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு விதிக்கப்படவிருந்த 20 சதவீதக் கட்டணத் திட்டத்தை அமெரிக்கா கைவிடுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

அதற்குப் பதிலாக, வளைகுடா நட்பு நாடுகளுடன் மேற்கொள்ளப்படும் புதிய வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் இந்த விவகாரத்திற்குத் தீர்வு காணப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய உலகளாவிய எரிசக்திப் பாதையான ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதற்கான அமெரிக்காவின் செலவினங்களை ஈடுசெய்ய, 20% கட்டணம் விதிக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்திருந்தார்.

சர்வதேச அளவில் இந்த அறிவிப்பு பெரும் விவாதங்களைக் கிளப்பிய நிலையில், ஒரே நாளில் அவர் தனது முடிவை மாற்றியுள்ளார்.

இது குறித்து தனது ‘ட்ரூத் சோஷியல்’ பக்கத்தில் ட்ரம்ப் பதிவிட்டுள்ளதாவது: “மத்திய கிழக்கு நாட்டுத் தலைவர்களுடன் நடத்தப்பட்ட மிகச் சிறந்த பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில், 20% அமெரிக்க ஈடுசெய்யும் கட்டணத் திட்டத்தைக் கைவிட முடிவு செய்துள்ளேன்.

அதற்குப் பதிலாக, பல்வேறு வளைகுடா நாடுகள் அமெரிக்காவில் மேற்கொள்ளவுள்ள பிரம்மாண்ட வர்த்தக மற்றும் முதலீட்டு ஒப்பந்தங்கள் நடைமுறைப்படுத்தப்படும். இந்த முதலீடுகள் மிகவும் பிரம்மாண்டமானதாகவும், அவர்களது எதிர்காலத்திற்குப் பயனுள்ளதாகவும் அமையும்.”

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles