தமிழக முதல்வர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இம்மாதம் 23ஆம் திகதியன்று திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக முதல்வர் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை ஹெச். வினோத் இயக்கியுள்ளார். இதில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல், பிரகாஷ் ராஜ் என பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு தணிக்கைச் சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்நிலையில், தணிக்கை வாரியம் ‘ஏ’ சான்றிதழ் அளித்துள்ளது. இந்நிலையில், இப்படம் ஜூலை 23இல் வெளியாகும் என படத் தயாரிப்பு நிறுவனமான கேவிஎன் புரொடக்ஷன்ஸ் அதிகாரபூர்வமாக இன்று அறிவித்துள்ளது.
