பிரதமர் கெய்ர் ஸ்டாமர் தான் பதவி விலகுவதற்கான உண்மையான காரணத்தை நேர்காணல் ஒன்றில் வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
அரசாங்கம் “ஒரு பெரிய சண்டைக்குள் சிதைந்து போவதைத்” தடுக்கவும், “ஒழுங்கான ஆட்சி மாற்றத்தை” உறுதி செய்யவும் தாம் பதவி விலக முடிவு செய்ததாக அவர் கூறினார்.
பொருளாதாரத்தில் ஏற்பட்ட முன்னேற்றங்கள், NHS காத்திருப்புப் பட்டியல்கள் குறைக்கப்பட்டது, மற்றும் குழந்தை வறுமையை ஒழிக்கும் முயற்சிகள் உள்ளிட்ட தனது பதவிக்காலத்தின் முக்கிய வெற்றிகளையும் அவர் இந்த நேர்காணலின்போது நினைவுக்கூர்ந்தார்.
தனது சாதனைகளில் பெருமிதம் தெரிவித்த அவர், தனது பிரதமர் பதவிக் காலத்தில் சர்வதேச அரங்கில் ஐக்கிய இராச்சியம் தனது “உற்சாகத்தை” மீண்டும் பெற்றதாகக் கூறினார்.
அதேநேரம் தொழிற்கட்சி ஆட்சிசெய்ய போதுமான நிலையை அல்லது தகுதியை அடையவில்லை என்ற முன்னாள் தலைமை ஊழியர் மோர்கன் மெக்ஸ்வீனி கூறிய கருத்துக்களையும் அவர் நிராகரித்தார்.
